சரிந்து விழுந்த மண்மேடு: போக்குவரத்திற்கு தடை

பதுளை மாவட்டத்தின் மடூல்சீமையில் இருந்து குருவிகொல்ல, பிட்டமாறுவ, மற்றும் மெட்டிக்காத்தன்ன செல்லும் பிரதான வீதியில் கல்லுல்ல பாலத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக மடூல்சீமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேநேரம், பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.