சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா மாணவர்கள் ஆங்கில தின போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை
சம்மாந்துறை கல்வி வலயத்தின் சம்மாந்துறை கமு/சது/செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இருந்து ஆங்கில தின போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான நாடகப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவ்வருடம் நடைபெற்ற ஆங்கில தின போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆங்கிலப் பாட ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது சிங்களப் போட்டி, சமூக விஞ்ஞான போட்டி, தமிழ்த்தினப் போட்டி, விளையாட்டுப் போட்டி மற்றும் சித்திர போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்