
சம்மாந்துறை எஸ் வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கோரிக்கை
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதான வீதியை இணைக்கும் எஸ் வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை, என பிரதேச வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
செட்டவட்டை, பூரான் புட்டி வட்டை போன்ற வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும்.
மேலும் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்