சம்மாந்துறை இளமானி பட்டதாரிகள் அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு விழா!

 

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை இளமானி பட்டதாரிகள் அமைப்பின் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, சம்மாந்துறை இளமானி பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஹினாஸ் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

புதிய உறுப்பினர்களுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியாக அமைக்கப்பட்ட விழாவின் போது, புதிய உறுப்பினர்கள், சம்மாந்துறை இளமானி பட்டதாரி அமைப்பின் முன்னணி உறுப்பினர்களிடமிருந்து வெகுவாக வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், முன்னாள் உறுப்பினர்களான, சம்மாந்துறை இளமானி பட்டதாரி அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எம். தஸ்னீம், பிரதித் தலைவர் ஐ.எல்.எம். சப்ரி மற்றும் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எஸ்.எம். பஹீம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்தோடு அமைப்பின் செயலாளர் ஏ.எஃப்.எம்.றஜ்வான், மகளிர் அணிக்குப்பொறுப்பான பிரதித்தலைவி எம்.என்.எஃப்.நுஸ்கா உட்பட நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக பிரதிநிதிகள், ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

உறுப்பினர்களுக்கிடையே உறவுகளை வலுப்படுத்தி, கல்வி மற்றும் சமூக பணிகளில் பங்கேற்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தப்பட்டது.

இந்த விழாவின்போது, புதிய உறுப்பினர்களுக்கு துவக்க நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

மேலும், சமூக மற்றும் கல்வியினை மேம்படுத்தும் பல எதிர்கால திட்டங்களும் முன்மொழியப்பட்டது.இந்த நிகழ்வுஇ புதிய உறுப்பினர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கிஇ அவர்களின் கல்வி பயணத்திற்கு சிறந்த தொடக்கத்தை அளித்தது.