சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்

-கல்முனை நிருபர்-

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாவது நாளாக இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தலைமையில் வியாழக்கிழமை இரவும் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சம்மாந்துரை பொதுசந்தையிலிருந்து ஆரம்பித்து ஹிஜ்ரா சந்திவரை சென்ற ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை சம்மாந்துறை பொலிஸார் துரிதகதியில் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது.