சம்மாந்துறையில் நகை திருட்டு : திருட்டில் ஈடுபட்ட பெண் அம்பாறையில் கைது

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த 7ஆம் திகதி நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் 7ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்யும் போது திருடிய நகைகளையும், திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவரையும் சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பாவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அம்பாறை இங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ,தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்