சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியது

புதுவருட விடுமுறையை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

அதேவேளை, சமை யல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தொட ர்பில் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தனியார் எரிபொருள்  பௌஸர்கள் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையே நேற்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் ஐந்து நாட்களாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை லிற்றோ கேஸ் நிறுவனம் நிறுத்தியிருந்தது. புதுவருட விடுமுறை காரணமாகவே அவ்வாறு விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது.