சமூகப் பார்வையுள்ள ஓர் மருத்துவரை யாழ் மண் இழந்துவிட்டது – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் பிரிவின் துறைத்தலைவருமான பேராசிரியர் Dr. ச.பாலகுமார் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்

கல்வித்துறையை தாண்டி சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திய மிகச்சிறந்த மனிதராக அவர் திகழ்ந்திருந்தார்.

தனது பிரதேச வளர்ச்சிக்காக தனது அறிவையும் ஆளுமையையும் அவர் சிறப்பாக பயன்படுத்தியதை நான் நன்கறிவேன்.

அன்னாரின் இழப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாண மருத்துவ துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், பல்கலைக்கழக சமூகத்துக்கும், மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன், என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்