
சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் உயிரிழப்பு
கண்டி – அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹதிரிம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொடை, ஹதிரிம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த வயோதிபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது வயோதிபர் திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அலவத்துகொடை மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24, 25 மற்றும் 61 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்