சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்
-யாழ் நிருபர்-
இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த திறந்த பிரிவில் யாழ்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் பிரகலாதன் ஜனுக்ஷன் தேசிய ரீதியில் 3 ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார் .
8 சுற்றுக்களை கொண்ட போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலை அடங்கலாக 6 1/2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற தெரிவுப் போட்டிகளில் 150 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிருந்தனர் .
இச்சுற்றுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற வீரர்கள் சர்வதேச மற்றும் ஆசிய ரீதியில் நடைபெறும் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றும் தகைமையை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .