சட்டவிரோத மதுபான உற்பத்தி: சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மலையாளபுரம் புது ஐயங்கன் குள பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைப்பதற்காக சென்றுள்ளனர். இதில் குறித்த பொலிஸாரில் காட்டுப் பகுதியில் இருந்து வௌியே வரவில்லை.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்  இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமால் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த காடு என்பதனால், உள்ளே என்ன நடந்தது என்பது தமக்கு  தெரியவில்லையென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்