சட்டவிரோத பீடி இலை பொதிகள் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டா குலியா கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டது.

1.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 110 கிலோகிராம் பீடி இலைகள் 37 பொதிகளாக பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

லொறியொன்றில் குறித்த பீடி இலைப்பொதிகளை ஏற்றி அதன் மேல் மீன்கள் அடங்கிய பெட்டியை ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் ​​கல்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.