சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் மக்களால் முற்றுகை

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால்இ அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக வருகிறது.

பெரிய குளம் பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்இ கிராம அபிவிருத்தி சங்கத்தினர்இ மாதர் சங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

</ul