
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த ஊதுபத்தி பெட்டிகள்
புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த ஊதுபத்தி பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த ஊதுபத்தி பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த பெட்டிகளை இறக்குமதி செய்தவரின் தகவல்கள் குறிப்பிடப்படாததன் காரணமாக அந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, உள்நாட்டு உற்பத்தியாளரின் எந்தவித தகவல்களும் உள்ளடங்காத ஒரு தொகுதி ஊதுபத்தி பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்