
சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி – முட்டை விலைகள்
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அதேபோல ஒரு கிலோ கோழி இறைச்சி 1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் முதல் மீன் விலையும் அதிகரிக்கும் என்று பேலியகொட மீன் சந்தை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்