சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது: பகி பாலச்சந்திரன்

-பதுளை நிருபர்-

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அவரது வெற்றியில் பதுளை மாவட்ட மக்களும் பங்காளிகள் ஆக வேண்டும் என பதுளை மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர் பகி பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பசறை மிதும்பிட்டி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இவ்வாறு அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தில் பல வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக எத்தனை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது? நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியவர்கள் நயவஞ்சகர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு எதிரான செயல் திட்டங்களுக்கு பாராளுமன்றத்தில் வாக்களித்தார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எதிர்வரும் 21திகதி இடம்பெறும் தேர்தலில் நிச்சயமாக சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதி என அவர் மேலும் தெரிவித்தார்.

இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெறும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்