சகோதரனை திருமணம் செய்ய போவதாக சொல்லும் சிறுமி : வைரலாகும் வீடியோ!

சிறுமி ஒருவர் தனது சகோதரனை திருமணம் செய்வதாக சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இணையத்தில் பலர் வருமானம் ஈட்டுகின்றனர், இன்னும் சிலர் இணையத்தை பொழுதுபோக்காக பயன்படுத்துகின்றனர், இன்னும் சிலர் இணையத்தை மோசடி செய்யும் தளமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறன விடயங்களில் ஒன்று தான் பிராங்க் வீடியோக்கள், அதாவது பொது இடங்களில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அர்த்தமில்லாத விடயங்களை செய்வதே இந்த பிராங்க் வீடியோ.

சமீபத்தில் இந்தியாவில், ஒரு சிறுமி தனது சகோதரனை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவிக்கும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில் சிறுமி, தனது சகோதரரின் குழந்தையை சுமந்து தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். “இது என் சகோதரன், நான் அவருடைய சகோதரி. நான் அவனுடைய குழந்தைக்கு தாயாகப் போகிறேன், அதனால் என் சகோதரனை மணந்தேன், எவராலும் எம்மைப் பிரிக்க முடியாது” என்று சிறுமி கூறுகின்றார்.

குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து, இந்த உறவுக்கு என்ன பெயர் என கேட்டு, கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீடியோவை உருவாக்கிய கன்ஹையா சிங் என்பவர் , இந்த வீடியோ வெறும் பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்ட பிராங்க் வீடியோ, என்றும் இதில் எவ்விதமாக உண்மை தன்மையும் இல்லை எனவும், தான் ஒரு வீடியோ கிரியேட்டர் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது போன்ற வீடியோக்கள் சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்தும் என பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்