சகோதரனுக்கு பதிலாக பரீட்சை எழுதிய இளைஞன் கைது!

தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன்  தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெனியாய – பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள பரீட்சை வினாத்தாளை கையளிக்க தயாரான மேற்பார்வையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்