கோட்டைச் சுவர் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

இந்தியா – மத்தியப்பிரதேச மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டைச் சுவர் இடிந்து அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

டாடியா நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக அதிகாலை 4 மணி அளவில் இந்த சுவர் இடிந்து விழுந்துள்ளதுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 4 இலட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.