‘கோட்டாகோகம’ வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு

‘கோட்டாகோகம’ விற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு ஒன்று இன்று விpஜயம் செய்துள்ளது. காலி முகத்திடலில் கடந்த இரு வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த குக்கிராமமம் அமைக்கப்பட்டது.

பொலிஸாரால் வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை, போராட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்படலாம் என தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு அங்கு சென்றுள்ளது.