Sri Lanka Tamil News Site

“கோட்டாகோகம” மீது தாக்குதல் சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்

- Advertisement -

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு வெளியே நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அலரிமாளிகைக்கு வந்த சிலர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

பின்னர் அவர்கள் காலி முகத்திடலில் உள்ள “கோட்டகோகம” எதிர்ப்பு தளத்தில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -