
கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி
கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
கிளிநொச்சி கரைச்சி கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2025ஆம் ஆண்டுக்கான பெருவிளையாட்டுக்களின் வரிசையில் வலைப்பந்தாட்ட போட்டி கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது. 16,18,20 வயதுப்பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது.
கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம் கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature