Sri Lanka Tamil News Site

கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதானவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

- Advertisement -

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இன்று காலை 9 மணியளவில் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!