கொழும்பு-மெல்பேர்ன் விமானத்தில் இலங்கையரின் தவறான நடத்தை : 7 ஆண்டுகள் சிறை?
கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானத்தில், முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
41 வயதான குறித்த இலங்கையர், நேற்று புதன்கிழமை விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைதானார்.
அவர் இன்று வியாழக்கிழமை ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரது வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்