கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவுறுத்தல்
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போரும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்ட மண்சரிவு அபாய வலயங்களிலுள்ள மக்களை அதிக மழை பெய்யும் காலங்களில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிப்போர் வீடுகளுக்கு அருகாமையில் அல்லது வீடுகளை நோக்கி பாறைகள் அல்லது மேடுகள் இருந்தால், அவர்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அபாயகரமான அறைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்