கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்

வாஸ்கொடகாம என்ற அதிசொகுசு கப்பலொன்று இன்று புதன் கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள குறித்த கப்பலில் 689 சுற்றுலாப் பயணிகளும் 460 பணியாளர்களும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன், பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த கப்பலில் வருகை தந்துள்ளனர்.