கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.