Sri Lanka Tamil News Site

கொழும்பில் சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி

- Advertisement -

சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

கைத்தொழில்கள் பெருந்தோட்ட அமைச்சர் டாக்டர் ரமேஸ் பத்திரன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று சனிக்கிழமை 7 ஆம் திகதி கண்காட்சியைத் ஆரம்பித்து வைத்தார்.

- Advertisement -

50க்கும் மேற்பட்ட இரத்தினக்கல் விற்பனைக் காட்சிக் கூடங்களைக் கொண்டிருக்கின்ற இந்த இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி, நாளை 9 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 3 நாட்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -