கொண்டு வரப்பட்ட உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள்

கடலில் மிதந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த “டெவோன் 05” மீன்பிடி படகிலிருந்த 04 மீனவர்களின் சடலங்களும் இன்று புதன் கிழமை புதன் கிழமை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இயந்திரக் கோளாறுக்குள்ளான படகு , மற்றுமொரு படகினைப் பயன்படுத்தி தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள் கப்பலில் வைக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்