கொட்டும் மழைக்கும் மத்தியிலும் களுவாஞ்சிக்குடி நகரில் புதுவருட வியாபாரம்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் நாளை புதன் கிழமை பிறக்க உள்ள 2025 புதுவருடத்தினை முன்னிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களை கட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்தது.