கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், ஒரு கிலோ மீற்றர் வீதியானது கொங்றீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மாதுளன், தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர் ரவீந்திரன், பாடசாலை  அதிபர் சபேசன்  மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்