-எஸ்.ஞானச்செல்வன்-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று ஞாயிற்று கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினைப் பெற்ற, இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் திருவிழா 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இதேவேளை இன்றைய தினம் கொடிக்கம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று வண்ணக்குமார்கள் பாரம்பரிய நடைமுறைகளுடன் பிள்ளையார் மற்றும் தான்தோன்றீஸ்வரர் தேரடிக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு தேர்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இரண்டு தேர்களும் ஆலய முன்றிலுக்கு பக்தர்களினால் இழுத்துவரப்பட்டு தேர் உற்சவம் இனிதே நிறைவுபெற்றது.