கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம் ?

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் கையடக்க தொலைபேசிகளின் விலைகளில் அதிகரிப்பு காணப்பட்ட நிலையில் ,கடந்த மாதங்களில் கையடக்க தொலைபேசி கொள்வனவு 40 வீதத்தால் குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்புடன் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசிகளுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

எனினும் மீண்டும் டொலர் விலை அதிகரித்தால் கையடக்கத் தொலைபேசி விலைகளும் அதிகரிக்கும் என தலைவர் தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகளுக்கான ஒவ்வொரு பாகமும் சீனா, சிங்கப்பூர் அல்லது துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் அனைத்து இறக்குமதிகளும் அமெரிக்க டொலர் செலுத்துதலுடன் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்