கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

காலி – ஹிக்கடுவ பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் மீன்பிடி படகொன்றில் பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் சந்தேக நபரான குறித்த படகின் உரிமையாளரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, அவரால் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, மெகசின் மற்றும் 4 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்