கேகாலையில் வாகன விபத்து: 7 பேர் படுகாயம்

கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டி, புரிமத்தலாவ தந்துரே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குழுவினர் மற்றும் கொழும்பு களனி பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பேர் உட்பட 7 பேர் குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்