கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளின் ஊடாக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது

கெஹெல்பத்தர பத்மே உட்பட கைது செய்யப்பட்ட குற்றக் குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 31 கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொடர்புடைய தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட  கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் பற்றிய தகவல் வெளிவந்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்  ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் போது சில அரசியல்வாதிகள் பயந்து அல்லது பதற்றம் அடைந்தால், அவர்களுடன் ஏதோ ஒருவகையான தொடர்பு இருந்ததா என்ற நியாயமான சந்தேகம் எழுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளார் .

இதேநேரம்  குற்றக்குழுவுக்கும் , போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராக சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதில் எந்தவித அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை குற்றக்குழுவினரிடமிருந்தும், போதைப்பொருட்களிலிருந்தும் விடுவிக்க பொலிஸ்  சட்டத்தின்படி செயற்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறியுள்ளார் .