கெஹெலிய, மனைவி மற்றும் மகளுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மூவரிடம் இன்று புதன்கிழமை வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர்இ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.