கெஹலிய தாக்கல் செய்த மனுமீதான பரிசீலனை ஒத்திவைப்பு

நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் தாக்கல் செய்த மனுமீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.கெஹலிய தாக்கல் செய்த மனுமீதான பரிசீலனை ஒத்திவைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்