கெஹலிய, காமினி வீடுகளின் முன் பதற்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்களுமான கெஹலிய ரம்புக்வெல மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கெஹலியவின் கண்டி வீட்டுக்கு முன்பாக ஒன்றுதிரண்ட போராட்டகாரர்களை விரட்டியடிப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பிலியந்தலையில் உள்ள காமினி லொக்குகேயின் வீட்டுக்கு முன்பாக இருந்த பெரிய பதாகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதால் அங்கு பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது.