கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் சந்தேக நபரான மருந்துகள் விநியோக பிரிவின் அதிகாரியொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்