
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை
அநுராதபுரம் – நொச்சியாகம – பஹலமரகஹவெவ பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து தந்தையொருவரும் அவரது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
56 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முன்னதாக இடம்பெற்ற கொலையொன்று தொடர்பில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.