கூகுளை நம்பி பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியாவில் கூகுள் மெப் (Google Map) வழிகாட்டுதலை பின்பற்றி பயணித்த மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூகுள் மெப் வழிகாட்டுதலை பின்பற்றி குறித்த பகுதியில் உள்ள இடிந்த மேம்பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது