“குஷ்” போதைப்பொருளுடன் ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!
10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை கடத்த முயன்ற ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமர்த்தியமாக தனது பயணப் பையில் மறைத்து போதைப்பொருளை கடத்த முயன்ற போது குறித்த சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 34 வயதான ரஷ்ய நாட்டவர் எனவும் அவர் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்து வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் ஆரம்ப கட்ட விசாரணைணகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் குறித்த நபர் “குஷ்” போதைப்பொருளை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்