குழந்தையை தாக்கி காணொளி பதிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் மனைவிக்கு அனுப்பிய கணவன்

-பதுளை நிருபர்-

ஊவ பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் நபர் ஒருவர், தனது 4 வயது மகனைத் கொடுரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா தோட்டம் மேல் பிரிவு உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் 26 வயதுடைய இளம் தந்தை ஒருவரே நேற்று வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், மனைவி கணவனுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, இமோ தொழில்நுட்பம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குழந்தையை வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், ஊவா பரணகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப கபில கல்லகே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்