குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
கண்டி – பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 30, 40 மற்றும் 55 வயதான 3 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த மூவரும் மடகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், 55 வயதான ஆண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏனைய இருவரின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை எனவும் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.