
குருநாகலில் வாகன விபத்து: 2 பேர் மரணம்
குருநாகல், தொரடியாவ, குருநாகல் – தம்புள்ள ஏ6 வீதியில் இன்று புதன் கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பிக்கப் வண்டி எதிர் திசையில் பயணித்த டிப்பர் வண்டியுடன் மோதி தொடர்ந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பயணி ஒருவரும் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளனர்.
சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிக்கப் வண்டி சாரதி விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்