Sri Lanka Tamil News Site

குரங்கு அம்மை தொற்று நோய் இலங்கையிலும் பரவியுள்ளதா?

- Advertisement -

உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி அறிவியல் மற்றும் உயிரணு ஆய்வு நிறுவகத்தில் அது தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என அவர் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் பதிவிட்டுள்ளார்.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று அடையாளம் காணப்பட்டது. அந்த நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு லண்டன் நகரில் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதுவரையில், ஐரோப்பாவில் 80க்கும் அதிக குரங்கு அம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!