குத்தகைக்கு பொருட்களை விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் பாரிய தீ

-பதுளை நிருபர்-

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்தகொட பகுதியில் விழாக்களுக்கான பொருட்களை குத்தகைக்கு விநியோகிக்கும் களஞ்சிய சாலை ஒன்றில் இன்று காலை 8.00 பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாக பதுளை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளன.

மேலும் எவ்விதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.