கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் ‘பகவத் கீதை’ மீது சத்தியம் செய்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஷிவானி ராஜா போட்டியிட்டார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்பாதாக எக்ஸ் தளத்தில் ஷிவானி தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்