
எங்களை துரோகி என்று சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மின்னல்24செய்திகளின் “அரசியலின் மறுபக்கம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கு என்று தனித்துவமாக ஒரு அரசியல் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் அதனை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர், எனினும் எங்களது கூட்டமைப்பை பார்த்து வடக்கு அரசியல் தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தை கிழக்கு தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்றும் கிழக்கு மாகாணத்தின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் தங்களது கூட்டமைப்பை பற்றி கருத்து சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் முழுமையாக காணொளி